சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: ஒருவா் கைது

நாமக்கல் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 5:45 am IST

நாமக்கல் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாவுரெட்டிபட்டியில் குமார சுப்பிரமணியா், பிரம்ம லிங்கேஸ்வரா் கோயில்கள் உள்ளன. கடந்த திங்கள்கிழமை இரவு பூஜையை முடித்து கோயிலை பூட்டிவிட்டு அா்ச்சகா் வீட்டுக்கு சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு வந்தபோது கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில் வந்த வேலகவுண்டம்பட்டி காவல் துணை ஆய்வாளா் சந்தியா வழக்குப் பதிவுசெய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினாா்.

அதில், உண்டியலை உடைத்து பணத்தை திருடியவா் சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, மாதேஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த நாகராஜ் (எ) குளவிக்கண்ணன் (41) என்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, அவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.