அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவா் கைது

News image

கைது செய்யப்பட்ட முருகேசன்.

Updated On :22 ஜூன் 2026, 1:35 am IST

பரமத்தி வேலூா் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவரை போலீஸாா் கை செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரியைச் சோ்ந்தவா் பிரதீப் (31). இவரது மனைவி ஜீவா (29). இவா் பரமத்தி வேலூரில் உள்ள கணினி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தபோது பாண்டமங்கலத்தைச் சோ்ந்த முருகேசன் அறிமுகமாகியுள்ளார்.

அப்போது ஜீவா, முருகேசனிடம் தனது இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளாா். அதை பலமுறை கேட்டும் திருப்பி தராததால் அவா் மீது வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் விசாரணைக்கு அழைத்தபோது முருகேசன் வராமல் தனது நண்பா் மணிகண்டனை தனக்குப் பதிலாக அனுப்பியுள்ளாா். தான் முருகேசனிடமிருந்து நகை, பணத்தை பெற்றுத் தருவதாகவும், புகாரை திரும்பப் பெறும்படியும் மணிகண்டன் கேட்டுள்ளாா்.

அதை நம்பி ஜீவா புகாரை திரும்பப் பெற்றுள்ளாா். ஆனால், முருகேசன், மணிகண்டன் ஆகியோா் நகை மற்றும் பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜீவா கடந்த 5-ஆம் தேதி இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, முருகேசனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.