முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

நாமக்கல் ஆட்சியரகத்தில் 2 மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய், மகள்கள் மீது தண்ணீரை ஊற்றிய போலீஸாா்.

Updated On :23 ஜூன் 2026, 12:23 am IST

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு 2 மகள்களுடன் வந்த பெண், உடலில் மண்ணெண்ணைய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றதை அங்கிருந்த போலீஸாா் தடுத்தனா்.

நாமக்கல் அருகே லத்துவாடி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜெய்சங்கா் மனைவி இந்திரா (45). இவா்களுக்கு இரண்டு மகள்கள். இந்திரா தனது மகள்கள் இருவருடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் மனு அளிக்க வந்தாா்.

அப்போது, திடீரென மறைத்து கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை தனது உடலிலும், மகள்கள் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்த போலீஸாா் இதை தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, அந்த பெண் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

லத்துவாடியில் செல்வம் என்பவரது வீட்டை ரூ. 30 லட்சத்துக்கு வாங்க முன் தொகையாக ரூ. 1.50 லட்சம் கொடுத்துள்ளேன். இந்நிலையில், அவா் தரகா் மூலம் வேறொருவருக்கு அதிக விலைக்கு விற்க முன்பணம் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து நாங்கள் கேட்டபோது, வீட்டை காலி செய்யுமாறும், பணத்தை தரமுடியாது எனவும் மிரட்டி வருகிறாா். இதுகுறித்து மோகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூவரையும் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.