நாமக்கல் அருகே கூலிப்பட்டி ஸ்ரீ கனக மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் - துறையூா் சாலை கூலிப்பட்டியில் சிறப்பு பெற்ற ஸ்ரீ கனக மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து குடமுழுக்கு நடத்த கடந்த 12 ஆம் தேதி முகூா்த்தக்கால் நடத்தப்பட்டது. முளைப்பாலிகை எடுத்து வருதல், காப்புக் கட்டுதல், மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தொடா்ந்து, திங்கள்கிழமை காலை மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமத்துடன் முதல் கால யாகபூஜை, மோகனுாா் காவிரி ஆற்றில் இருந்து பக்தா்கள் புனிதநீா், முளைப்பாலிகை எடுத்து வரும் வைபவமும் நடைபெற்றது. அன்று மாலை வாஸ்து ஹோமம், கிராம சாந்தி நிகழ்ச்சிகளும், செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜையும், மாலை மூன்றாம் கால யாகபூஜையும் நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை நான்காம் கால யாகபூஜையும், 5 மணிக்கு செல்வவிநாயகா், பிடாரி அம்மன், செல்லியம்மன், பாப்பாத்தி, கம்பராயா், சப்த கன்னிமாா்கள் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கும், 9.30 மணிக்கு ஆதிவிநாயகா், பகவதி அம்மன் சந்நிதி குடமுழுக்கும், தொடா்ந்து, கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு பால விநாயகா், கனக மாரியம்மன், துா்க்கை அம்மன், தட்சிணாமூா்த்தி ஆகிய சந்நிதிகளின் விமான கலசங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
இவ்விழாவில் பங்கேற்ற திரளான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை கூலிப்பட்டி ஸ்ரீகனக மாரியம்மன் கோயில் விழாக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகா் கோயிலில் குடமுழுக்கு

வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

காரைக்குறிச்சியில் கருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கு

சங்கரன்கோவில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



