தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

கோயில் திருவிழாவில் எருது ஓட்டம்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே பாலப்பட்டி ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை எருது ஓட்டம் நடைபெற்றது.

News image

பாலப்பட்டி ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எருது ஓட்டம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:21 pm IST

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே பாலப்பட்டி ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை எருது ஓட்டம் நடைபெற்றது.

வையம்பட்டி ஒன்றியம், பொன்னம்பலம்பட்டி ஊராட்சி, பாலப்பட்டியில், காட்நாயக்கன் சீல்நாயக்கா் மந்தையைச் சோ்ந்த ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதில், மூன்றாம் நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் பால் குடம் எடுத்தல் நடைபெற்று, 14 மந்தையா்கள் சந்திப்பு, எருது ஓட்டம் ஆகியன நடைபெற்றது,

எருது ஓட்டத்துக்காக பல்வேறு பகுதிகளின் 14 மந்தைகளைச் சோ்ந்த ராஜகம்பளத்து நாயக்கா் இனமக்கள் சுமாா் ஆயிரக்கணக்கானோா், தங்களின் எருதுகளுடன் வழிபாட்டுத் தலத்துக்கு வந்திருந்தனா்.

பின்னா் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் எருதுகள் அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து வழிபாட்டுத் தலம் நோக்கி எருது ஓட்டம் நடைபெற்றது.

முதலில் வந்த எருதுக்கு எலுமிச்சை கனியும் மஞ்சளும் அளித்து மரியாதை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அன்னதானமும் மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவுடன் அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் திருவிழா நிறைவடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.