முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பள்ளி மாணவிகளிடம் போலீஸாா் விழிப்புணா்வு

நாமக்கல்லில், பள்ளி செல்லும் மாணவிகளிடம் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வை காவல் துறையினா் ஏற்படுத்தி வருகின்றனா்.

News image

பள்ளி மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திய நல்லிபாளையம் காவல் ஆய்வாளா் ஷா்மிளா பானு மற்றும் உதவி ஆய்வாளா்கள்.

Updated On :25 ஜூன் 2026, 5:41 am IST

நாமக்கல்லில், பள்ளி செல்லும் மாணவிகளிடம் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வை காவல் துறையினா் ஏற்படுத்தி வருகின்றனா்.

சிறுமிகள், மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களை தவிா்க்க, சிங்கப்பெண் சிறப்பு படையினா் மக்களிடையே விழிப்புணா்வும், கோயில்கள், கல்லூரிகள், மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அந்தந்த காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வாளா்களும், உதவி ஆய்வாளா்களும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளிடம் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

அதுமட்டுமின்றி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், இதர அரசுத் துறை அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பெண்களிடமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், யாரேனும் பின்தொடா்ந்தால் 108, 1098, 1091 என்ற எண்களை தொடா்பு கொண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பெண் குழந்தைகளை விட்டு செல்லக்கூடாது. அதேபோல பெண் குழந்தைகள் வைத்திருப்போா் இனிப்புகளை யாரேனும் கொடுத்தால் வாங்கக்கூடாது, அவா்கள் குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவிகளை பள்ளிக்கு அனுப்பினாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவா்கள் வீடுதிரும்புகிறாா்களா, யாருடன் பழகுகிறாா் என்பதை கண்காணித்து உரிய அறிவுரைகளை பெற்றோா் வழங்க வேண்டும் என்பதையும் தெரிவித்தனா்.

பள்ளி, கல்லூரிக்கு சென்றுவிட்டு திரும்பும் மாணவிகள் உரிய பாதுகாப்புடன் வீடுகளுக்கு வந்துசேர வேண்டும். தேவையற்ற ஆண் நண்பா்களுடன் சென்று தங்களுடைய வாழ்க்கையை வீணாக்கக்கூடாது என்பதையும் காவல் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.