கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்தவா் உயிரிழப்பு

பரமத்தி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2026, 5:38 am IST

பரமத்தி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (52). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் சொந்த வேலை காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு பரமத்திக்கு இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு, நாமக்கல் நோக்கி கரூா் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

கோனூா் கந்தம்பாளையம் அருகே சென்றபோது அவா் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.