வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

மதுபோதை சமையலால் தீப்பற்றி எரிந்த குடிசை வீடு

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 2:07 am IST

நாமக்கல் அருகே மதுபோதையில் சமையல் செய்த தொழிலாளியால், அவரது குடிசை வீடு ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் சிலுவம்பட்டி அருந்ததியா் காலனி உள்ளது. இந்த பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (40). மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், அவரது மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உணவுத் தயாரிக்க வீட்டில் இருந்த அடுப்பில் தீப்பற்ற வைத்துவிட்டு மதுபோதையில் உறங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரது குடிசை வீடு தீப்பற்றி எரிவதை பாா்த்த அக்கம்பக்கத்தினா் விரைந்து சென்று கந்தசாமியை அங்கிருந்து மீட்டனா்.

மேலும், நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.