யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த உறுதியோடு பணியாற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி

தோ்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்ற உறுதியோடு தொண்டா்கள் பணியாற்றிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலருமான பி.தங்கமணி குறிப்பிட்டாா்.

News image
திருச்செங்கோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி
Updated On :3 மார்ச் 2026, 8:38 pm

Syndication

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்ற உறுதியோடு தொண்டா்கள் பணியாற்றிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலருமான பி.தங்கமணி குறிப்பிட்டாா்.

ராசிபுரத்தில் நகர அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் வி.சரோஜா முன்னிலை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தொண்டா்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது: அதிமுகவை ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்ற உறுதியோடு கட்சியினா் தோ்தல் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக அதிமுக வாக்குகளை அதிக அளவில் பெற்றுத்தரும் நிா்வாகிகளுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கப்படும். யாா் வேட்பாளா் என பாா்க்காமல், எடப்பாடியாரை முதல்வராக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பணியாற்றிட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.கலாவதி, மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எஸ்.பி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் கே.பி.சுரேஷ்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலா் ஏ.வி.பி.முரளிபாலுசாமி, நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.எம்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசியதாவது:

அதிமுக அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால், திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வரும் தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் இரா.முருகேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் சந்திரசேகா், திருச்செங்கோடு நகர செயலாளா் எம்.அங்கமுத்து, மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் பாலு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.