ராசிபுரம் அருகேயுள்ள காா்கூடல்பட்டி, நாரைக்கிணறு பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகள் 128 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கா.சரவணன் தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று காா்கூடல்பட்டி, நாரைக்கிணறு ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். பின்னா் அவா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் நாரைக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் பட்டா வழங்குவதாகக் கூறி நிறைவேற்றவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் 40 ஆயிரம் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இதில், வருவாய்த் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

99 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்

திருச்சியில் 87 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் பேச்சு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


