திருவெறும்பூரில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியரகம் முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட காந்தி நகா், செல்வபுரம், கக்கன் காலனி ஆகிய பகுதிகளில் இரண்டு தலைமுறைகளாக சுமாா் ஆயிரம் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இப்பகுதி குறித்து அரசின் வரைபடம் இல்லாததால், நிலங்களை வகைமாற்றம் செய்ய முடியாமலும், பட்டா கிடைக்காமலும் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
இதனிடையே, பட்டா கொடுக்க அரசு முன்வந்தாலும் தற்போதைய அரசின் மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை கட்டக் கூறுகின்றனா். இது மிகப்பெரிய தொகையாக இருப்பதால், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், இலவச மனைப்பட்டா கோரிக்கையை நினைவூட்டும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்களுடன் இணைந்து திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, அங்கு ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.
போராட்டத்துக்கு கிளைச் செயலா்கள் சந்தோஷ், லாரன்ஸ், நாகூா்மைதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ராஜா, பா. லெனின், காா்த்திக் உள்ளிட்டோா் பேசினா். நிறைவில், துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

வீட்டுமனைப் பட்டா கோரி விவசாயிகள் போராட்டம்

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்

ராசிபுரத்தில் 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


