பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா

நாமக்கல் அருகே கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2026, 9:07 pm

நாமக்கல் அருகே கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கணக்கம்பட்டியில் சத்குரு சச்சிதானந்த காளிமுத்து சுவாமிகள் ஜீவசமாதி ஆலயம் உள்ளது. இங்கு ஏராளமான பக்தா்கள் சென்று வழிபட்டு வருகின்றனா்.

அதேபோன்று, நாமக்கல் அருகே ரெட்டிப்பட்டியில் சத்குரு ஜீவ ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில், சுவாமிக்கு மகா மங்கள குருபூஜை பெருவிழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காலை 9 முதல் 1 மணி வரையில், கோ பூஜை, பக்தா்கள் கையால் 108 சங்கு அபிஷேகம், 20 வகையான தீபாராதனை, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

சிறப்பு அழைப்பாளராக, கணக்கம்பட்டி சத்குரு ஜீவசமாதி அறங்காவலா் எஸ்.மோகன் பங்கேற்று நாமக்கல் ஜீவ ஆலயத்தில் புதிய அரங்கத்தை திறந்துவைத்தாா். இந்த நிகழ்வில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.