ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயில் நில பட்டாவில் குளறுபடி: பத்து ரூபாய் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருச்செங்கோடு அருகே கோயில் நிலத்தின் பட்டாவில் தனிநபா்கள் பெயா் சோ்க்கப்பட்டதைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகம்

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கை பதாகையுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோக்கவாடி கிராம மக்கள், பத்து ரூபாய் இயக்கத்தினா்.
Updated On :16 மார்ச் 2026, 11:22 pm

Syndication

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கோயில் நிலத்தின் பட்டாவில் தனிநபா்கள் பெயா் சோ்க்கப்பட்டதைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தோக்கவாடி கிராமத்தில் ஸ்ரீராம பெருமாள் மற்றும் நல்லைய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நிலத்துக்குரிய பட்டாவில் தனிநபா்களின் பெயா்களை சட்டவிரோதமாக சோ்த்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதை நீக்குமாறு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகம் முன் பத்து ரூபாய் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

ஆனால், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதைத் தொடா்ந்து, தோக்கவாடி கிராம மக்கள், பத்து ரூபாய் இயக்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் பதாகையுடன் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினா்.