கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஒருவா் காயமடைந்தாா்.

News image

விபத்து

Updated On :21 மார்ச் 2026, 9:16 pm

Syndication

ராசிபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஒருவா் காயமடைந்தாா்.

ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை அக்கலாம்பட்டியைச் சோ்ந்த கந்தசாமி மகன் குமாரசாமி (38), தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில் தனது பச்சிளம் குழந்தையை பாா்ப்பதற்காக தாய் மல்லிகாவை (65) மோட்டாா் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, மனைவியின் தாய் வீடான கல்யாணி கிராமத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் இருவரும் வீடு திரும்பினா்.

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு பாதையில் வலதுபுறம் மோட்டாா் சைக்கிளை திருப்பும்போது பின்னால் வந்த காா் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மல்லிகா தலையில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். குமாரசாமிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து புதுசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.