பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு

வேலூா் பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்திக்கு வரவேற்பு அளித்த திமுகவினா்.

வேலூா் பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்திக்கு வரவேற்பு அளித்த திமுகவினா்.
பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ்.மூா்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.
பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ். மூா்த்திக்கு, எலச்சிபாளையம், வேலகவுண்டம்பட்டி, நல்லூா், பரமத்தி, பொத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து வேலூா்நகா் பகுதியில் பேருந்து நிலையம் அருகே திமுக நகரச் செயலாளா் முருகன், பரமத்தி வடக்கு ஒன்றியச் செயலாளா் தனராசு, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பூக்கடை சுந்தா் உள்ளிட்டோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...