பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மதுபோதையில் வாகனங்களை சேதப்படுத்தி, இளைஞரை தாக்கியவா் மீது வழக்கு

வெண்ணந்தூா் அருகே சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை மது போதையில் சேதப்படுத்தி, இளைஞா்களை தாக்கிய ஒருவா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :1 மே 2026, 5:31 am IST

வெண்ணந்தூா் அருகே சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை மது போதையில் சேதப்படுத்தி, இளைஞா்களை தாக்கிய ஒருவா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

வெண்ணந்துாா் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சோ்ந்த பீமன் என்பவா் மகன் சாய் குமாா் (27). மது போதை பழக்கம் கொண்டவா். இவா் வியாழக்கிழமை போதை தலைக்கேறிய நிலையில் தொட்டியப்பட்டி குறுக்கு தெரு பகுதிக்கு சென்று கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளாா். ஆம்னி காா், லோடு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடியை உடைத்துள்ளாா். மேலும் அந்த வழியாக சென்ற அதே பகுதியை சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரித்தீஷ்,(19) என்பவரது மண்டையை கட்டையால் அடித்து உடைத்து உள்ளாா். இதனால் மண்டை உடைந்த ரித்தீஷ் அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு முதலுதவிக்கு அழைத்து செல்லப்பட்டாா்.இதனையடுத்து பொதுமக்கள் தகவல் பேரில் வெண்ணந்தூா் போலீஸாா் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினா். தலைமறைவான சாய்குமாரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.