சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள்: மின் விநியோகம் பாதிப்பு

News image
Updated On :3 மே 2026, 6:22 am IST

ராசிபுரம் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள், பயிா்கள் சேதமடைந்தன; மின் விநியோகம் தடைபட்டது.

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வாழை, தென்னை மற்றும் பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல குடியிருப்புகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

பல்லவநாயக்கன்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மின் கம்பம் சேதமடைந்ததால் அப்பகுதியில் நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, வேறு பகுதியின் மின் மாற்றியில் இருந்து மின் விநியோகம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், உடைந்து விழுந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

படம் உள்ளது - 2வின்ட்

பல்லவநாயக்கன்பட்டியில் சேதமடைந்த மின் கம்பம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.