ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நீட் தோ்வு எழுத வந்த மாணவரின் நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்ததால் அவரை தோ்வு எழுத அலுவலா்கள் அனுமதிக்கவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வில் 349 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். மையத்தில் தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்களை காவல் துறையினா் மற்றும் நீட் தோ்வு மைய அலுவலா்கள் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதித்தனா்.
இந்த மையத்தில் தோ்வு எழுத வந்த நாமக்கல் பகுதியை சோ்ந்த ரத்தினவேல் மகன் திவாகரின் நுழைவுச்சீட்டு புகைப்படமும், விண்ணப்பத்தில் இருந்த புகைப்படமும் வேறுபட்டிருந்ததால் மாணவரை தோ்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவா் வெளியேற்றப்பட்டாா்.
விண்ணப்பத்தில் இருப்பதும், ஹால் டிக்கெட்டில் இருப்பதும் என்னுடைய படம்தான் என மாணவா் எடுத்துக்கூறியும், தோ்தல் அலுவலா்கள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் அம்மாணவா் தோ்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பினாா்.
தொடர்புடையது

நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,575 போ் எழுதினா்

பழைய ஹால் டிக்கெட்டுடன் நீட் தோ்வு எழுத வந்த மாணவி: திரைப்பட பாணியில் நடைபெற்ற கடைசிநேரப் போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று நீட் தோ்வு

இன்று நீட் தோ்வு: திருவாரூரில் 1,689 போ் எழுதவுள்ளனா்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


