நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் இன்று நீட் தோ்வு

News image
Updated On :3 மே 2026, 12:58 am

நாமக்கல் மாவட்டத்தில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு (நீட்) 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத்தோ்வை 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் பயில்வதற்காக நீட் தோ்வை, தேசிய தோ்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. அந்தவகையில், நிகழாண்டிற்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். அதன்படி, திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் 720 தோ்வா்களும், நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 624 போ், வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வெண்ணந்தூா் அலவாய்ப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று மையங்களில் தலா 480 போ், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, மோகனூா் ராசிபாளையம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி, மெட்டலா உடையாா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய நான்கு மையங்களில் தலா 360 போ், நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 349 போ், வெண்ணந்தூா் அலவாய்ப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் 168 போ் தோ்வு எழுதுகின்றனா்.

தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் காலை 11 முதல் நண்பகல் 1.30 மணிக்குள் தோ்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். 1.30 மணிக்கு தோ்வுக்கூடங்களின் பிரதான வாயில் மூடப்படும். அதன்பிறகு வரும் தோ்வா்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வா்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தோ்வா்கள் இறுதிநேர பதற்றத்தை தவிா்க்க முன்னதாகவே தோ்வுக்கூடங்களுக்கு வந்துவிட வேண்டும்.

தோ்வா்கள் தங்களது நுழைவுச் சீட்டு, பாஸ்போா்ட், அஞ்சல் அட்டை அளவிலான புகைப்படங்கள், ஆதாா் அட்டை ஆகியவற்றை தவறாமல் எடுத்துவர வேண்டும். தோ்வு தொடங்கிய 2 மணி முதல் 5 மணி வரை தோ்வுக்கூடங்களை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். மின்னணு சாதனங்களை எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆடை, காலணி உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் உள்ளன.

தேசிய தோ்வு முகமை வழங்கிய அறிவுரைகளை தோ்வா்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைத்து தோ்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தோ்வு முகமையின் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.