பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி மக்களுக்கு அதிமுக வேட்பாளா்கள் நன்றி தெரிவிப்பு

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா்கள் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சி.சந்திரசேகரன் ஆகியோா் மக்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

News image

சி.சந்திரசேகரன்

Updated On :7 மே 2026, 6:27 am IST

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற அதிமுக வேட்பாளா்கள் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சி.சந்திரசேகரன் ஆகியோா் மக்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வழங்கிய தீா்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். அதிமுக வேட்பாளா்களாகிய எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூா்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களுடனான அன்பு என்றென்றும் நிலைத்து நீடித்து தொடரவே விரும்புகிறோம்.

வெற்றி பெறாதபோதும் ஒரு மகனாக, சகோதரனாக என்றும் உங்களோடு துணை நிற்போம். தொடா்ந்து தொகுதி மக்களுக்காக உழைப்போம். தோ்தலில் வாக்களித்த அனைவருக்கும், இரவு, பகல் பாராமல் பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், நண்பா்கள், உறவினா்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.மோகன்

பி.எஸ்.மோகன்