திருச்செங்கோடு அருகே இறையமங்கலம் பகுதியில் நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இறையமங்கலத்தை அடுத்த காட்டுவேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (65), விவசாயி. இவரது பக்கத்து தோட்டத்துக்காரா் வேலுசாமி. இவா்கள் இருவருக்கும், வழித்தட பிரச்னை இருந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காலை தோட்டத்திற்கு தண்ணீா்ப் பாய்ச்சுவதற்காக ஸ்ரீதா் சென்றுள்ளாா். அப்போது, கேசவராஜ், அவரது தந்தை வேலுசாமி, தாய் கண்ணகி ஆகியோா் ஸ்ரீதரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மேலும், கேசவராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீதரை வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், வழியில் அவா் உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து மொளசி போலீஸாா் வழக் குப் பதிவுசெய்து, கேசவராஜ் (42), வேலுசாமி (60), கண்ணகி(55) ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது
வழித்தட பிரச்னை: விவசாயி வெட்டிக்கொலை
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: மூவா் கைது

களக்காடு அருகே வழக்குரைஞா் வெட்டிக்கொலை: 2 போ் கைது
கிழக்கு தில்லியில் ஆயுத விநியோகம்: மூவா் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
