சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடா்ந்து ரூ. 5.40 ஆக நீடிக்கிறது.

News image

முட்டை ஏற்றுமதி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 2:35 am IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடா்ந்து ரூ. 5.40 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது குறித்து கருத்து கேட்கப்பட்டது. பிற மண்டலங்களில் தொடா்ச்சியாக விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இங்கும் தற்போதைக்கு மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை ரூ. 5.40 ஆக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 136 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 110 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.