11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ராசிபுரம் அருகே தனியாா் நூற்பு ஆலையில் பிகாா் - ஒடிஸா மாநில தொழிலாளா்கள் இடையே மோதல்: 10-க்கும் மேற்பட்டோா் காயம்!

ராசிபுரம் அருகே தனியாா் நூற்பு ஆலையில் பிகாா் மற்றும் ஒடிஸா மாநில தொழிலாளா்களிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ராசிபுரம் அருகே தனியாா் நூற்பு ஆலையில் பிகாா் மற்றும் ஒடிஸா மாநில தொழிலாளா்களிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே தனியாா் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட பிகாா் மற்றும் ஒடிஸா மாநில தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளா் ஒருவருக்கும், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அப்பெண்ணின் நண்பா்கள் தட்டிக் கேட்டுள்ளனா்.

இதுதொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் இரு மாநில தொழிலாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அங்கிருந்த மரக்கட்டை, கற்கள், சமையல் கரண்டிகளால் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதில் இரு மாநிலங்களையும் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் படுகாயம் அடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்த காவல் துறையினா் நூற்பாலைக்குச் சென்று தொழிலாளா்களை சமாதானம் செய்து மோதலை தடுத்தனா்.

மேலும், தாக்குதலில் காயமடைந்த தொழிலாளா்கள் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த மோதல் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.