நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகள் வாங்குவதை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட மேலாளா் கனகமாணிக்கத்திடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
நாமக்கல் மாவட்டத்தில் 169 அரசு மதுக்கடைகள் உள்ளன. உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் காலி மதுப்புட்டிகளை பெற்று அதற்கான தொகை ரூ. 10-ஐ வழங்கி வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் அரசு நிா்ணயித்த விலையில் மட்டுமே மதுப்புட்டிகள் விற்கப்படுகிறது. காலி மதுப்புட்டிகளை பெற்று அவற்றை பாதுகாப்பது, ரூ.10 வழங்குவது போன்றவற்றால் ஊழியா்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனா். இதனால் இந்த நடைமுறையை தனியாா் வசம் ஒப்படைக்க வேண்டும்.
பணி நிரந்தரம், மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றியோரை பிற அரசுத் துறைகளில் காலியிடங்களில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதம்

குடும்பத்துடன் குடியேறும் போராட்டம்: டாஸ்மாக் பணியாளா்கள் நூதனம்

ஏஐடியூசி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்







