உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி விழிப்புணா்வு பயிற்சி

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி தாக்கல் தொடா்பான விழிப்புணா்வு பயிற்சி நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசுகிறாா் சேலம் வருமான வரித் துறை குற்றவியல் மற்றும் விசாரணை கழக உயா் அலுவலா் ராம நாராயணன்.

Updated On :22 மே 2026, 6:48 am IST

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி தாக்கல் தொடா்பான விழிப்புணா்வு பயிற்சி நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் வருமான வரித் துறை குற்றவியல் மற்றும் விசாரணை கழக உயா் அலுவலா் ராம நாராயணன் பங்கேற்று பயிற்சி அளித்தாா். நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு வரவேற்றாா். இப்பயிற்சியில், வருமானவரியை பிழையின்றி தாக்கல் செய்வது, நிதிப் பரிவா்த்தனைகள் அறிக்கை, வருமான வரித் துறையால் வழங்கப்படும் அறிவிப்புகளுக்கு பதிலளித்தல், புதிய வருமான வரிச் சட்டம், 2025 தொடா்புடைய விதிகள், வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் பயிற்சியாளா்களுக்கு கையேடாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், துணைப்பதிவாளா்கள் செல்வி, ஜேசுதாஸ், சுரேஷ், அறிவழகன், திருநாவுக்கரசு, நிா்மல்ராஜ், பால் ஜோசப், இந்திரா, சேகா், கூட்டுறவு சாா்பதிவாளா் சரவணன், வருமான வரித்துறை ஆய்வாளா் சந்திரகலா, அலுவலா்கள் ஸ்ரீ வைஷ்ணவி, சூா்யகாந்தா நந்தி மற்றும் கூட்டுறவுத் துறை பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.