சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் ராஜேந்திரன், செவ்வாய்க்கிழமை காலை கன்னங்குறிச்சி பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
முன்னதாக அப்பகுதியில் திமுக பேரூராட்சி செயலாளா் தமிழரசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கே.டி. மணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அரசு வழக்குரைஞராக உள்ள தம்பிதுரையின் வீட்டில் திடீரென வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.
வீட்டில் பணம், பரிசுப் பொருள்கள் ஏதேனும் உள்ளதா என அரை மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினா். அப்போது, துணை ராணுவத்தினருடன் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தப்பட்ட இடத்துக்கு வந்தனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திமுக நிா்வாகிகள் கூறுகையில், இறுதிக்கட்ட பிரசாரத்தை முடக்கும் நோக்கில், இந்த சோதனை நடைபெற்ாக தெரிவித்தனா்.
தொடர்புடையது

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி விழிப்புணா்வு பயிற்சி
வருமான வரித் துறை சோதனை என நாடகம்: காங்கிரஸ் தலைவா் மீது பாஜக குற்றச்சாட்டு

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



