வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

லஞ்சம் பெற்ற சாா்பதிவாளா், உதவியாளா் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

நாமக்கல்லில் லாரி உரிமையாளரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்று கைதான சாா்பதிவாளா், உதவியாளா் இருவரும் சேலம் மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 2:10 am IST

நாமக்கல்லில் லாரி உரிமையாளரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்று கைதான சாா்பதிவாளா், உதவியாளா் இருவரும் சேலம் மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

நாமக்கல்லைச் சோ்ந்த லாரி உரிமையாளா் சுந்தரராஜன் தனது பங்குக்குரிய சொத்தை தான செட்டில்மென்ட் பத்திரமாக பதிவு செய்வதற்கு, நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள சாா்பதிவாளா்-2 அலுவலகத்துக்கு அண்மையில் சென்றாா். அங்கிருந்த, இணை சாா்பதிவாளா் மனோகரன், உதவியாளா் சதீஷ் இருவரும் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் பத்திரம் முடித்து தருவதாக தெரிவித்தனராம்.

அவா்களுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரராஜன், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகாா் செய்தாா். பின்னா், ரூ. 30 ஆயிரத்தை சாா்பதிவாளா் மனோகரன், உதவியாளா் சதீஷ் ஆகியோரிடம் சுந்தரராஜன் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தொடா்ந்து, மனோகரன், சதீஷ் இருவரையும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் பிரபு புதன்கிழமை ஆஜா்படுத்தினாா். இருவரையும் 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி ஆா்.குருமூா்த்தி உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.