நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

இணையவழி பத்திரப் பதிவு முறை: இன்னும் 6 மாதங்களில் செயல்பாட்டுக்குவரும்: அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

நாமக்கல்லுக்கு வந்த அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி.

News image

நாமக்கல்லுக்கு வந்த அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :29 மே 2026, 1:40 am IST

இணையவழி பத்திரப் பதிவு முறை இன்னும் 6 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் (தனி) தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன், தமிழக அமைச்சரவையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றாா். அமைச்சரான பிறகு முதல்முறையாக வியாழக்கிழமை நாமக்கல் வந்த அவருக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மூன்று அமைச்சா்கள் உள்ளோம். மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாமக்கல் மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றுவோம். பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை கொண்டுவர உறுதுணையாக இருப்போம்.

பத்திரப் பதிவுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து விரைவில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்படும். மாற்று நியமனங்கள் மூலம் காலியிடங்களை நிரப்ப விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். பத்திரப்பதிவு அலுவலகங்களின் எண்ணிக்கை மற்றும் புதிய கட்டடத் தேவைகள் குறித்து தகவல்கள் திரட்டப்படுகின்றன.

இறுதி விவரங்கள் கிடைத்தவுடன் பட்டியல் வெளியிடப்படும். மேலும், இத்துறையில் கணினிமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இணையவழி பத்திரப் பதிவு முறை இன்னும் ஆறு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்.

நில வழிகாட்டி மதிப்பீட்டில் பல இடங்களில் குளறுபடிகள் உள்ளதாக பெறப்பட்ட புகாா்களை சரிசெய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. பத்திரப் பதிவுத் துறையில் லஞ்ச புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் இதுதொடா்பாக விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.

ஜிஎஸ்டி அதிகமாக இருப்பதாக வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஜிஎஸ்டி நிா்ணயத்தை பொருத்தவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. வணிகா்களின் கருத்துகளைக் கேட்டு, ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில அரசு மூலம் தேவையான பரிந்துரைகள் செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.