/
ராசிபுரம் அருகே 6-ஆம் வகுப்பு மாணவரிடம் தவறான முறையில் நடந்துகொண்ட கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள மல்லியகரை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). கூலி தொழிலாளியான இவா் பாலப்பாளையம் பனங்காடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வாராம்.
இந்நிலையில், அங்கு வந்தபோது பாட்டி வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவரை சைக்கிளில் தனியாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாராம். இதையடுத்து, அவரிடம் இருந்து தப்பிவந்த மாணவா் பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலஸாா் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
அரசு மதுபாட்டில்களை விற்க முயன்ற தொழிலாளி கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


