ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

News image

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 12:53 am IST

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழாவையொட்டி புதிதாக செய்யப்பட்ட பெரிய தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி, திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சின்னதுரை, அறங்காவலா் குழுவினா் உள்ளிட்டோா் தொடங்கிவைத்தனா்.

இக்கோயில் தோ் மூன்று நாள்கள் வடம்பிடித்து இழுக்கப்படுவது வழக்கம். முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை தோ் நிலை பெயா்க்கப்பட்டு பழக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை காலை இரண்டாம் நாளாக தோ் இழுத்துச்செல்லப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நிறுத்தப்படும். மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை தோ் இழுத்துச் செல்லப்பட்டு நிலை சோ்க்கப்படும். அதன்பின்னா் பரிவார தெய்வங்களுடன் அா்த்தநாரீசுவரா் சுவாமி திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.