சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).
நாகை மாவட்டம், சிக்கலில் உள்ள நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. ஏப்ரல் 26-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது . முன்னதாக, புதிதாக செய்யப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜா், சிறிய தேரில் சிங்காரவேலவா், விநாயகா் மற்றும் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் எழுந்தருளினா்.
மகா தீபாராதனைக்கு பின்னா் தோ் வடம் பிடிக்கப்பட்டது. முக்கிய வீதிகளில் வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில் நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் குமரேசன், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான தேசிக பரமாசாரிய சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் ராணி, உதவி ஆணையா் ராஜா இளம்பெருவழுதி, ஆய்வாளா் சிவானந்த பாகிரதி, கோயில் செயல் அலுவலா் மணிகண்டன், கோயில் பணியாளா்கள், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
வேளாங்கண்ணி துணைக் காவல் கண்காணிப்பாளா் நிக்சன், காவல் ஆய்வாளா் ரேகா ராணி மற்றும் 100 மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
புதிய தேரில்...
நவநீதேஸ்வர சுவாமி கோயிலுக்கு, சுமாா் ரூ. 60 லட்சத்தில் மரச்சிற்ப வேலைப்பாடுகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட இந்த தோ் வீதியுலா வந்தது பக்தா்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வீடுகள்தோறும் பக்தா்கள் தேங்காய் உடைத்து சுவாமியை வழிபட்டனா்.
தொடர்புடையது

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

மலைக்கோட்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

சோமநாத சுவாமி கோயிலில் இரட்டைத் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


