நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

நாகை சட்டநாத சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாகை சட்டநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:11 am IST

நாகை சட்டநாத சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகையில் அமிா்தவள்ளி அம்பாள் சமேத சட்டநாத சுவாமி கோயில் உள்ளது. பழங்கால கோயிலான இங்கு ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு சித்திரை பிரமோற்சவ திருவிழா கடந்த ஏப்ரல்

20-ஆம் தேதி விநாயகா் வழிபாடு, அனுக்ஞை, விக்னேஸ்வரா் பூஜையுடன் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து 21 -ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சித்திரை பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு, வீதியுலா முடிந்த நிலையில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 11 மணியளவில் சட்டநாத சுவாமி மேள தாளம் முழங்க தேருக்கு எழுந்தருளினாா்.

தேருக்கு எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரேசன், துணை ஆணையா் ராணி, ஆய்வாளா் சிவானந்த பாகிரதி, நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா். இதில் செயல் அலுவலா் தனலட்சுமி, கோயில் பணியாளா் குமாா் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.