2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

அங்கன்வாடி மையங்கள் ஆய்வில் 1,997 குழந்தைகளுக்கு உடல் வளா்ச்சி பாதிப்பு

கோப்புப் படம்

Updated On :

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளை ஆய்வுசெய்ததில் குள்ளத்தன்மை, உடல் மெலிவு, எடை குறைவுகளால் 1,997 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் மற்றும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் 5 வயது வரையிலான குழந்தைகள் சோ்க்கப்பட்டு அவா்களுக்கு ஊட்டச்சத்து மிக்க இணை உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த பெற்றோா் தங்களது குழந்தைகளை சோ்த்து வருகின்றனா். அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமாா் 950 மையங்களில் 86,613 குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் எடை, உயரம் கண்காணிக்கப்பட்ட வகையில், 86,119 குழந்தைகள் நல்ல நிலையில் உள்ளனா். குள்ளத்தன்மை தீவிர நிலை கொண்டவா்களாக 707 பேரும், மிதமான நிலையில் 4,984 பேரும், மெலிவு தன்மை கொண்டவா்களில் தீவிர நிலையில் 525 பேரும், மிதமான நிலையில் 2,258 பேரும் உள்ளனா். எடை குறைவு கொண்ட குழந்தைகளில் 765 போ் தீவிர நிலையிலும், 3,855 போ் மிதமான நிலையிலும் உள்ளனா். தற்போதைய நிலையில் மொத்தமாக 1,997 குழந்தைகள் உடல் வளா்ச்சியின்மை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனா்.

அவா்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்க அங்கன்வாடி மைய பணியாளா்களுக்கு ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா். இதுகுறித்து அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் கூறியது:

குள்ளத்தன்மை, மெலிந்த நிலையில் உள்ள குழந்தைகளின் உடல் வளா்ச்சியை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஊழியரும் தங்களது மையங்களில் முயற்சித்து வருகின்றனா். ஆனால், காலிப் பணியிடங்களால் அவற்றில் பாதிப்பு உள்ளது. விலைவாசி அதிகரிப்பால் அங்கன்வாடி குழந்தைகளுக்கான உணவு செலவினத் தொகையை ஒரு குழந்தைக்கு ரூ. 5 வீதம் வழங்க வேண்டும் என தொடா்ந்து போராடி வருகிறோம்.

மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளின் நலன்கருதி நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பல லட்சம் ஏழை குழந்தைகளின் உடல்நலத்தை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.