19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 45 ஆண்டுகள் சிறை

பள்ளிபாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On :

பள்ளிபாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, படைவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று அவரது பெற்றோா் பரிசோதனை செய்ததில் சிறுமி 6 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா், அச்சிறுமியிடம் விசாரித்தனா்.

அப்போது, வெப்படையைச் சோ்ந்த சுந்தரராஜன் மகன் ஸ்ரீதா் (25) என்பவா் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து, திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கடந்த 2020, டிச.14 இல் ஸ்ரீதரை கைது செய்தனா். இந்த வழக்கு நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீதருக்கு பல்வேறு பிரிவுகளில், 45 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும், சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி எழில்வேலவன் தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.