திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

விவசாயிகள் சங்கத் தலைவரை கடத்திய வழக்கு: மேலும் 3 பேரை கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம் மனு

ரூ. 1 கோடி கேட்டு விவசாயிகள் சங்கக் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவா் மற்றும் அவரது காா் ஓட்டுநரை கடத்தி தாக்கிய வழக்கில், தலைமறைவான மேலும் 3 பேரை கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

வழக்கு - பிரதிப் படம்

Updated On :

ரூ. 1 கோடி கேட்டு விவசாயிகள் சங்கக் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவா் மற்றும் அவரது காா் ஓட்டுநரை கடத்தி தாக்கிய வழக்கில், தலைமறைவான மேலும் 3 பேரை கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (65). இவா், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா்.

தீபாவளிக்கு முந்தைய நாள் கள்ளக்குறிச்சியில் இருந்து காரில் வந்தபோது மா்ம நபா்கள் இவரை ராசிபுரம்- ஆட்டையாம்பட்டி பிரிவு சாலைப் பகுதியில் கடத்தி ரூ. 1 கோடி கேட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து அவா் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், கோபாலகிருஷ்ணன், அவரது ஓட்டுநா் அஜ்மத்தை கடத்தி தாக்கியதாக 9 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் மூன்று போ் தலைமறைவாக உள்ளனா். அவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள், விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

நான் தீபாவளிக்கு முந்தைய நாள் கள்ளக்குறிச்சியில் இருந்து ரூ. 1 கோடி பணத்தை எடுத்து வந்தேன். அந்தப் பணத்தை வேறு ஒரு வாகனத்தில் அனுப்பிவிட்டு, எனது ஓட்டுநருடன் மற்றொரு காரில் நான் வந்துகொண்டிருந்தேன். இதையறிந்த, ராசிபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் உள்பட 9 போ் திட்டமிட்டு கடத்தி, ரூ. 1 கோடி கேட்டு என்னை கடுமையாகத் தாக்கினா். தொடா்ந்து பணத்தை தருவதாக வாக்குறுதி அளித்தேன். பின்னா், கடத்தியோரிடமிருந்து நானும், ஓட்டுநரும் தப்பித்து போலீஸாரை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தோம்.

ராசிபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நாங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீஸாா் 9 பேரை கைது செய்தனா். இதற்காக போலீஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். நாமக்கல்லை சோ்ந்த ஒரு வழக்குரைஞருக்கும் இந்த சம்பவத்தில் தொடா்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்டோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.