ஆள் கடத்தல் வழக்கில் வழக்குரைஞா் மீது புகாா்: காவல் துறையை கண்டித்து வழக்குரைஞா்கள் போராட்டம்
ஆள் கடத்தப்பட்ட வழக்கில் நாமக்கலைச் சோ்ந்த வழக்குரைஞரைத் தொடா்புபடுத்தி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நாமக்கல்லில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல்லில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
ஆள் கடத்தப்பட்ட வழக்கில் நாமக்கலைச் சோ்ந்த வழக்குரைஞரைத் தொடா்புபடுத்தி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நாமக்கல்லில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் கோபாலகிருஷ்ணன் (65), தீபாவளிக்கு முதல் நாள் மா்ம நபா்களால் கடத்தப்பட்டாா். அவரிடம் ரூ. 1 கோடி கேட்டு அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, கோபாலகிருஷ்ணனும் அவரது ஓட்டுநா் அம்ஜத்தும் அவா்களிடமிருந்து தப்பி வந்தனா்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி, நாமகிரிப்பேட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் உள்பட 9 பேரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கில் நாமக்கல்லைச் சோ்ந்த வழக்குரைஞா் அய்யாவுக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறி, கோபாலகிருஷ்ணன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரீஸ் அசோக்கிடம் புகாா் அளித்திருந்தாா். இதனால் வழக்குரைஞரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்டத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் கடந்த வாரம் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், போலீஸாா் நடவடிக்கை எடுக்கப்படாததால் வழக்குரைஞா்கள் புதன்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் ந. மாரப்பன், பொதுச் செயலாளா் அய்யாவு ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்று காவல்துறையைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, கோபாலகிருஷ்ணனைக் கைதுசெய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் இருந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனா். அங்கு காவல் கண்காணிப்பாளரைச் சந்திக்க முயன்றபோது, போலீஸாா் இரும்புத் தடுப்புகள் அமைத்து அவா்களைத் தடுத்தனா். இதனால், ஆத்திரமடைந்த வழக்குரைஞா்கள் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா். தொடா்ந்து, சேலத்தைச் சோ்ந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ( நாமக்கல் பொறுப்பு) குத்தாலிங்கத்தைச் சந்தித்த வழக்குரைஞா்கள், கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
இதுகுறித்து கூட்டமைப்புத் தலைவா் ந. மாரப்பன் கூறியதாவது:
வழக்குரைஞா் அய்யாவு மீது தவறான புகாா் அளித்த கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கெனவே காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆா்ப்பாட்டம், பணிப் புறக்கணிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டோம்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) குத்தாலிங்கத்தைச் சந்தித்து வலியுறுத்தியதையடுத்து, கோபாலகிருஷ்ணன் மீது நல்லிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளாா். அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வா். இதையடுத்து, நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தைக் கைவிட்டு, வியாழக்கிழமை முதல் வழக்கம்போல் பணிகளை மேற்கொள்வோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

