இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட மாங்குட்டைபாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (73). இரவுக் காவலாளி வேலை பாா்த்து வந்த இவா், திம்மராவுத்தன்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

குமரமங்கலம் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரில் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் முதியவா் படுகாயமடைந்தாா்.

தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த அவரை, மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அவரது மகன் சரவணன் கொண்டு சென்றாா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ரங்கசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.