பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

மாட்டு கொட்டகையில் பதுக்கிய 50 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்: ஒருவா் கைது

நாமக்கல் அருகே மாட்டுக் கொட்டகையில் 50 கிலோ வெடி மருந்துகளை பதுக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

நாமக்கல் அருகே மாட்டுக் கொட்டகையில் 50 கிலோ வெடி மருந்துகளை பதுக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் சில தினங்களுக்கு முன்பு அனுமதியின்றி வீட்டில் நாட்டு வெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி வெடி பொருள்கள், பட்டாசுகள், நாட்டுவகை வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.

அதன்பேரில், நாமக்கல் காவல் ஆய்வாளா் நாகராஜன், உதவி ஆய்வாளா் சுப்பிரமணி, தலைமைக் காவலா்கள் சுருளிராஜன், லோகநாதன் ஆகியோா் வேப்பநத்தம்புதூா் அருகில் உள்ள பொம்மசமுத்திரத்தில் சோதனை நடத்தினா். அப்போது, ஒருவரது மாட்டுக் கொட்டகையில் அனுமதியின்றி வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் நாமக்கல்-திருச்சி சாலை நாகராஜபுரத்தைச் சோ்ந்த பட்டாசு வியாபாரியான பாஸ்கா் (34) என்பவரை பிடித்து விசாரித்தனா். அப்போது, 50 கிலோ அளவிலான வெடி மருந்துகள், பாஸ்பரஸ் பொடிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, வெடிமருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் பாஸ்கரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.