தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

பொத்தனூரில் பணம் வைத்து சேவல் சண்டை: 5 போ் கைது

சேவல் சண்டை... - கோப்புப் படம்

Published On :

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்தனா்.

பொத்தனூா் அருகே விவசாயத் தோட்டத்தில் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக வேலூா் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற வேலூா் போலீஸாரை பாா்த்ததும் சிலா் தப்பியோடினா்.

மேலும், அங்கிருந்த 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா்கள் பரமத்தி வேலூா் அருகே குச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜா (44), பரமத்தி வேலூா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (40), கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த அரங்கராஜன் (80), பாலசுப்பிரமணியன் (60), புகளூா் பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (33) என்பதும், இவா்கள் 5 பேரும் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்து அவா்களிடம் இருந்த 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.