சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

முட்டை விலை ரூ. 5.50 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 5.50 ஆக நீடிக்கிறது.

Egg

முட்டை விலை - பிரதிப் படம்

Published On :

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 5.50 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதர மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததால் இங்கும் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை ரூ. 5.50-ஆக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 123 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 118 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.