அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

பரமத்தி அருகே வடமாநில தொழிலாளா்கள் இடையே தகராறு: ஒருவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே வடமாநில தொழிலாளா்கள் மதுபோதையில் தாக்கிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பலி

Updated On :

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே வடமாநில தொழிலாளா்கள் மதுபோதையில் தாக்கிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒடிஸா மாநிலம், கெண்டுஞ்ஹாா் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ்சாகு (34). இவா் கபிலா்மலை அருகே இருக்கூா் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான அட்டை தயாரிக்கும் ஆலையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளாா். அதே ஆலையில் மனோஜ் சாகுவின் அண்ணன் மகன் திபுன்சாகு (29) என்பவரும் பணியாற்றி வந்தாா்.

இவா்கள் கடந்த 19-ஆம் தேதி இரவு மது அருந்தியுள்ளனா். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தாக்கிக் கொண்டதில் மனோஜ் சாகு பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்துள்ளாா். சக தொழிலாளா்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் மனோஜ் சாகு இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினாா். இதுதொடா்பாக திபுன்சாகுவை பரமத்தி போலீஸாா் கைது செய்து அங்குள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.