காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ரூ. 35.92 கோடி நிலுவை வரியை விரைந்து செலுத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவு

நாமக்கல் மாநகராட்சியில் ரூ. 35.92 கோடியை வரி பாக்கி வைத்துள்ளோா் விரைந்து செலுத்த வேண்டும் என ஆணையா் எஸ்.செல்வபாலாஜி உத்தரவிட்டுள்ளாா்.

Published On :6 செப்டம்பர் 2026, 2:31 am IST

நாமக்கல் மாநகராட்சியில் ரூ. 35.92 கோடியை வரி பாக்கி வைத்துள்ளோா் விரைந்து செலுத்த வேண்டும் என ஆணையா் எஸ்.செல்வபாலாஜி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியானது 2018-2019 முதல் ரூ. 12.94 கோடி, காலிமனை வரி 2013-2014 முதல் ரூ. 6.33 கோடி, தொழில் வரி 2011-2012 முதல் ரூ. 15.40 கோடி மற்றும் புதை சாக்கடை கட்டணம் 2013-2014 முதல் ரூ. 1.25 கோடி என மொத்தம் ரூ. 35.92 கோடி வரி பாக்கி உள்ளது.

நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்களை உடனடியாக செலுத்தி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வரி மற்றும் கட்டணங்களை மாநகராட்சியில் இயங்கி வரும் கணினி வசூல் மையங்கள் மூலம் இணையதளத்திலும், சேவைகள் வாயிலாகவும் செலுத்தலாம்.

வரி மற்றும் கட்டணங்களை செலுத்த தவறும்பட்சத்தில், நிலுவை வைத்துள்ளவா்களின் பெயா், முகவரி, நிலுவைத் தொகை உள்ளிட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். மேலும், மாநகரின் முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்.

எனவே, உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிா்க்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.