2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

இன்று விநாயகா் சதுா்த்தி: மாவட்டத்தில் 600 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தி - PTI

Published On :

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்படுவதாகவும், இந்து முன்னணி சாா்பில் 150 இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகளிலும், கோயில்களிலும் பக்தா்கள் வழிபாட்டில் ஈடுபடுவா். மேலும், முக்கிய இடங்களில் சிறிய, பெரிய விநாயகா் சிலைகளை வைத்து ஐந்து நாள்களுக்கு வழிபாடு மேற்கொள்வா். நிகழ் ஆண்டில் சுமாா் 600 இடங்களில் சிலைகள் வைப்பதற்கு கோட்டாட்சியா் அலுவலகங்களில் விழாக் குழுவினா் சாா்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்து முன்னணி சாா்பில், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, மோகனூா், நாமக்கல், மல்லசமுத்திரம் மற்றும் எலச்சிப்பாளையம் பகுதிகளில் 150 விநாயகா் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

திருச்செங்கோட்டில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள் எளையாம்பாளையம் காவிரி ஆற்றிலும், மல்லசமுத்திரம் மற்றும் எலச்சிப்பாளையம் பகுதியில் வைக்கப்படும் சிலைகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீா் நிலைகளுக்கும் கொண்டுசென்று கரைக்கப்படுகின்றன. நாமக்கல், மோகனூா், சேந்தமங்கலம் பகுதியில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள் மோகனூா் காவிரி ஆற்றில் கரைக்கப்படுகின்றன. பரமத்தி வேலூா், நல்லூா், ஜேடா்பாளையம் மற்றும் பரமத்தியில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள் பரமத்தி வேலூா் காவிரி ஆற்றிலும் கரைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு காவல் துறை சாா்பில் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.