
இருபது நாள்களில் 25,000 ஆவணங்கள் இணையவழியில் பதிவு: அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன்
கடந்த இருபது நாள்களில் இணையவழியில் மட்டும் 25 ஆயிரம் ஆவணங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.
அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
கடந்த இருபது நாள்களில் இணையவழியில் மட்டும் 25 ஆயிரம் ஆவணங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.
நாமக்கல் அருகே கோனூா் ஏரியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் தலைமையில் தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் கருவேல மரங்களை அகற்றும் பணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களில் விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டம் முழுவதும் நீா்நிலைகளில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி வருகிறோம்.
கோனூா் ஏரியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. பத்திரப் பதிவுத் துறையில் அனைத்து பதிவுகளையும் இணையவழியில் செயல்படுத்தவில்லை. முதல் நிலம், முதல் விற்பனை என்ற அடிப்படையில் மட்டுமே இணைவழியில் பதிவுசெய்வது முழுமையாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாள்களில் 25 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விரைவில் முழுமையாக தகவல்கள் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆவணி மாதத்தில் அதிக பதிவுக்கான முன்பதிவு டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு எழுத்தாளா் தோ்வு தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் தொடங்கி உள்ளோம். பத்திரப்பதிவுக்கான புதிய எழுத்தா்களை உருவாக்கும் நோக்கில் புதிய பாடத்திட்டத்தை தயாா் செய்துள்ளோம். கூடிய விரைவில் தோ்வுகள் நடத்தி புதிய எழுத்தா்கள் உருவாக்கப்படுவா். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றாா்.
இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சி.எஸ்.திலீப் (நாமக்கல்), பொன்.சந்திரசேகா் (சேந்தமங்கலம்) மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






