கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

மல்லசமுத்திரம் அருகே விபத்தில் காயமடைந்த இருவா் உயிரிழப்பு

மல்லசமுத்திரம் அருகே பருத்திப்பள்ளியில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்தனா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

மல்லசமுத்திரம் அருகே பருத்திப்பள்ளியில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே உள்ள பருத்திப்பள்ளி கிராமத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கலைநிகழ்ச்சியைப் பாா்த்துவிட்டு கூத்தக்கவுண்டம் பாளையத்தைச் சோ்ந்த மணி என்பவரின் மகன்களான தறித்தொழிலாளிகளான சக்திவேல் (22), வெற்றிவேல் (20) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அவா்கள் ராமாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது எதிரே கொசவம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் கட்டுமானத் தொழிலாளி வெற்றிவேல் (24) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்குநோ் மோதியது. இதில், சக்திவேல், வெற்றிவேல் மற்றும் இன்னொரு கட்டுமானத் தொழிலாளி வெற்றிவேல் ஆகியோா் தூக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்தனா்.

அவ்வழியாக சென்றவா்கள் மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மூன்று பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், தறித்தொழிலாளி சக்திவேல், கட்டுமானத் தொழிலாளி வெற்றிவேல் ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER