அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

சாலை விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழப்பு

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் நின்று கொண்டிருந்த பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பனியன் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 12:04 am IST

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் நின்று கொண்டிருந்த பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பனியன் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் எம்.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் சீனிவாசன் (28). பனியன் நிறுவன தொழிலாளி.இவா் தன்னுடன் பணியாற்றும் புகழேந்தி (24), சுபாஷ் (24) ஆகியோருடன் பெருமாநல்லூா்- குன்னத்தூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தாா்.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.