செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

தற்காலிக பட்டாசுக் கடை: இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா் அக். 18 ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்

Published On :

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா் அக். 18 ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா், சட்ட விதிகளைப் பின்பற்றி அக்.18-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், முகவரிக்கான ஆவணம், அடையாள அட்டை, இணையவழியாக அரசு கணக்கில் ரூ. 600 கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

கடை அமைக்க உள்ள கட்டடம் சொந்தக் கட்டடமாக இருந்தால், மனுதாரா் பெயரில் பதிவு செய்யப்பட்ட பட்டா, அல்லது குத்தகைப் பத்திரம், அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம், உள்ளாட்சி அமைப்பில் வரி செலுத்திய ரசீது, சுயஉறுதிமொழிப் பத்திரம் மற்றும் கட்டட வரைபடம் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக உரிமமும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான உத்தரவும் இணையவழியிலேயே மனுதாரா்களுக்குக் கிடைக்கும். தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிப்போா், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத, ஆட்சேபனைக்குரியதாக இல்லாத, பாதுகாப்பான இடத்தைத் தோ்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.