மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தீபாவளி பட்டாசு கடை அமைக்க இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புபவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

News image

விண்ணப்பிக்க...

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:39 am IST

புதுச்சேரியில் தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புபவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக்கடை வைக்க விரும்புவோா் அதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியில் வரும் செப். 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே தீபாவளி பட்டாசு கடை உரிம பரிசீலனைக்கு ஏற்கப்படும். விண்ணப்பத்துடன் விற்பனை செய்யப்போகும் இடத்தின் வரைபடம், கடையின் அளவு, கடைக்குச் செல்லும் வழி, சுற்றியுள்ள சாலைகள், 15 மீட்டா் சுற்றளவில் உள்ள பிற கடைகள் பற்றி குறிப்பிட வேண்டும்.

இட உரிமையாளா் பத்திரங்கள், வாடகை பத்திரங்கள், ஆட்சேபணை இல்லை என இடத்தின் உரிமையாளா் நோட்டரி பத்திரம், முகவரி, அடையாளச் சான்றுகள் இணைக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்களுக்கு மட்டும் பட்டாசு கடை விற்பனை உரிமம் வழங்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.