இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சேலத்தில் கருத்துக் கேட்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை சேலத்தில் திங்கள்கிழமை நடத்தினர்.

Updated On :

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை சேலத்தில் திங்கள்கிழமை நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மாவட்டம் தோறும் சென்று விவசாயிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர்.

அந்தவகையில் சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் திங்கள்கிழமை நடந்தது. இதில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், துணைப் பொதுச் செயலர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.

சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் என சுமார் 22-க்கும் அதிகமான சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதில், கைத்தறி நெசவாளர்கள் மின் கட்டணத்தால் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு போதிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

காவிரி உபரிநீரை சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெறும் வகையில் திட்டத்தை நிறைவேற்றக்கோரி காவிரி உபரிநீர் பாதுகாப்புக்குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் மேட்டூர் அணை நிரம்பும்போது, அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. இந்தத் தண்ணீரை நீர் உந்து திட்டம் மூலம் சரபங்கா நதியுடன் இணைத்து சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் திட்டம் நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்தாமல், மாவட்டம் முழுவதும் பயனடையும் வகையில் அமைத்திட வேண்டும் என அவர்கள் குழுவினரிடம் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்திசெல்வன், தருமபுரி மாவட்டச் செயலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.