பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

பார்வையற்ற கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்கப் போராட்டம்

சேலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் பார்வையற்ற பேராசிரியர்கள் கல்லூரியின் முன் திங்கள்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :

சேலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் பார்வையற்ற பேராசிரியர்கள் கல்லூரியின் முன் திங்கள்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குணசேகரன் தலைமை வகித்தார். இந்தப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி பேராசிரியர்கள் 6 பேர் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சேலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பேராசிரியர் குணசேகரன் கூறியது:

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யூஜிசி) பார்வையற்ற மாற்றுத் திறனாளி பேராசிரியர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் வழங்கி வருகிறது. சேலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 மாற்றுத் திறனாளிப் பேராசிரியர்களுக்கு 2013-2014, 2014-2015-ஆம் கல்வி ஆண்டுகளுக்கான தொகையைக் கல்லூரி முதல்வர், கல்லூரிக்கு வழங்கும் நிதியிலிருந்தோ அல்லது கல்லூரி நிதியிலிருந்தோ வழங்கிவிட்டு, அந்தத் தொகையை யூஜிசியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என யூஜிசி உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி தன்னாட்சி நிதியாக யூஜிசி ரூ.16 லட்சம் வழங்கியுள்ள நிலையில், கல்லூரியின் முதல்வர் எங்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை வழங்க மறுத்து வருகிறார். இதைக் கண்டித்து நாங்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

கல்லூரி முதல்வர் மாற்றுத் திறனாளி பேராசிரியர்களுக்கு வாசிப்பாளர் நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.